Author: கிரிஷன்
•7:50 AM
கிரகணம் 
"விண்மீன்கள் கொண்டு விளக்கேற்றி ,
மேகத்தால் கோலமிட்டு
என் வான்மனையில் உனக்காக
கண் விழித்துக் காத்திருந்தேன் ,,
வெ(என்)ண்ணிலவே உனக்கு மட்டும்
ஏன் இத்தனை கிரகணங்கள்.......... ??"

செல்பேசி 
‎"செல்லரித்த காகிதம் ஒன்று
உன்னை செல்லில் அழைக்கிறது ,,
காரணமும் கதையுமின்றி
மணித்துளிகள் தாண்டி எம் பேச்சும் நீள்கிறது ,
சொல்லவந்ததை தவிர யாதும் சொல்லிவிட்டேன் ..
செல்லோ செவியை சுடுகிறது............"கவிதை வலி 
கவிதை என்பது நீ குடிக்கும் காலைக் காபி அல்ல பெண்ணே ...
புலவனின் ஐம்புலன்களும் பறித்து அரைநிர்வாணமாக்கி
அவன் வலியை புசிக்கும் காதலுக்கு
அவன் கொடுக்கும் சாஹித்ய விருது
ஒருதலைக் காதல் எனும் ஆளில்லாத் தீவுகளில்
கண்,கை, கால் கட்டிவிடப்பட்டவர்கள் பாடும் ஒப்பாரி
நேற்றொரு குழந்தையும்
இன்றிரு குழந்தையும் ஈனும்
பச்சையுடம்புக்காரியின் பிரசவ வலி

திங்கள் 
"பூமிக்கு திங்கள் இத்தனை தொலைவில்லை -என்
வெள்ளிக்கு மட்டும் திங்கள் நீ தொலைவிலா ????????? "
பூக்கள் 
மொட்டுக்களை எடுத்து கூந்தலில் சூடினாய்
பூத்துக்கொண்டன
வாடிவிட்டது எண்டு வீசுகிறாய் ,,,
இப்போதுதான் வாடுகின்றன ..

என்னைத் தா 
"அழகென்ற திமிருக்கும் 
அறிவென்ற அகங்காரத்திற்கும் பிறந்தவளே ...
. யாருக்கு 'நீ' வேண்டும் ,
 நான் கேட்பது 'என்னை'த்தான்......... "

புரியலையா
சோகத்தில் நீ கிறுக்கும்
வெள்ளைக் காகிதமாய்
கோபத்தில் நீ உடைக்கும்
கண்ணாடிக் குவழையொன்றாய்
சுடும் வெயிலில் நீ தேடும்
சாலையோர மரநிழலாய்
அடை மழையில் நீ விரிக்கும்
மஞ்சள் மலர்க்குடையாய் - உன்
நாட்குறிப்பின் ஒரு புறத்தில்
நானும் ஒரு சிறு குறிப்பாய்
மாறிவிட ஏங்குகிறேன்
இன்னும் புரியலையா..சமிக்ஞை விளக்குகள் 
அவள் சாலைக்கு வந்தநேரம்
நாற்சந்தியில் வாகனநெரிசல்
- சமிக்ஞை விளக்குகள்
நாணிச்சிவந்துகொண்டன 


தனியே 

வற்றிப்போன ஆற்றை
வெறித்துப்பார்க்கும் நாராய் ,,
நீ வந்து போன சுவடுகளில்
நாராய் நானாய் ..

கால்கள் 
கதிரைக்கும் குதிரைக்கும் இருப்பதுபோல் ,
என் கவிதைக்கும் கால்கள் வைத்திருந்தால் ,,அவை
உன் காதில் இறங்கியே
என் காதல்
சொல்லி இருக்கும்...........
செவி 
"உடலின் நலிய எலும்பு செவியில் என்று 
விஞ்ஞானம் சொன்னது ,,,
அவள் செல்லில் அழைக்கும் போதெல்லாம்
 விஞ்ஞானம் பொய்யாகுது "நான் காணும் முகம் 

‎"நீ தேடிப்பூச்சூடும் மரங்கள் தரும் தென்றலிலும் ,
பூமிக்கு நோகாது நீ பவனிவரும் சாலையிலும் 
நான் காணும் உன் முகம் போதும் எப்போதும் ,,
நீ இல்லாத நாட்களை எண்ணவில்லை- இல்லை,
நீ இல்லை என்றே நான் எண்ணவில்லை "

பிரிவு 

‎"இடைவெளி விழுந்தது இருக்கும் இடத்தில்தான்,,,
இடைவேளை இன்றி உனை சுமக்கும் என் இதயத்தில் அல்ல..
.என் தனிமைகளை விழுங்கும் உன் நினைவுகளும் 
, நான் தூங்கியும் தூங்காத உன் கனவுகளும் உள்ளவரை...........
இடைவெளியு ம் இன்பவெளிதான்.."


|
This entry was posted on 7:50 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On April 25, 2011 at 10:03 AM , Sutha said...

உன்
நாட்குறிப்பின் ஒரு புறத்தில்
நானும் ஒரு சிறு குறிப்பாய்
மாறிவிட ஏங்குகிறேன்

Super brother.... its so nice... carry on.
Would like to rtead more...

 
On April 25, 2011 at 10:13 AM , கிரிஷன் said...

thankx anna... :)

 
On April 29, 2011 at 10:23 AM , Thusha said...

I love that "Pirivu" kavithai da,really super..."Idaivelliyum Inba velli than"Great engayo poitai..........keep it up

 
On April 30, 2011 at 1:41 PM , கிரிஷன் said...

thanx alot thusha acca