Author: கிரிஷன்
•4:28 AM





























Author: கிரிஷன்
•10:21 AM
"   வைரமுத்துவிடம் இருந்து ஒரு அப்பட்டமான திருட்டு இந்தக் கவிதையின் கரு. கவிதையின்  உடலும் வரிகளும் மட்டும்  எனக்கு சொந்தமானவை.  கவிப்பேரரசுவின் விசிறிகள் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும்...இயன்றவரை அந்த மூலக் கவிதையின் நடையிலேயே எழுத முயன்றிருக்கிறேன் ."



சவரச்செலவு  சைபர் ஆகும் 
ஆகாரச்செவு அரைவாசியாகும்  
நிலவு தூங்கிய பின் நித்திரைக்கு செல்வாய் 
விடியலுக்கு முன் விழித்துக்கொள்வாய்
காதலித்துப்பார் 

உனக்குள்ளே சிரித்ததுண்டா
உலகம் உனைப்பார்த்து சிரித்ததுண்டா 
இரண்டும் நடக்கும்  
காதலித்துப்பார் 

பூவும் புல்வெளியும் 
பூமிதொடும்  வானமும் 
அத்தனை அழகில்லை என்பாய் 

விடுமுறைகள் உனக்கு விரோதியாகும் 
நீ கிறுக்குபவை கவிதை ஆகும் 
நீ மட்டும்  கிறுக்கன் ஆவாய் ..

உன் மூச்சின் உஷ்ணம்\
 உன்னைச்சுடுவது புரியும் 
இதயம் துடிப்பது அடிப்ப்தாய் தெரியும் 
கல்லூரிச்சாலைகளில்  
காத்திருந்து உன் கால் தேயும் 
காதலித்துப்பார் 

உன் சென்டுப்போத்தல்கள் 
சீக்கிரமே காலியாகும் 
செல் பேசிக்கட்டணம் 
சிகரமாய் ஏறும்

‘முகப்புத்தகத்தில்’
 நிரந்தர வாசகனாவாய் 
உன் கொச்சைத்தமிழ் நடுவே  
ஆங்கிலமும் தவழும் 
காதலித்துப்பார் 

பொறுமையில் பூமியை வேல்லவேண்டுமா
தேடலில்கூகிளை” வெல்லவேண்டுமா
காதலித்துப்பார்

விடலை வயதில் 
விரல் சூப்பிப் பழக்கம் உண்டா
ஆணாய் இருந்தும் 
நாணம் வந்ததுண்டா
நிலத்தில் நடக்கையில் மிதந்ததுண்டா 
நீரில் குளிக்கையில் வியர்த்ததுண்டா 
காதலித்துப்பார் 

குளியலறை கனவுக்கூடமாகும் 
உன் கற்பனைத்தாகம் 
கடல்  குடித்து முடிக்கும்
மோகப்பசி வெள்ளம் 
வரப்புடைக்கும்  
  காதலித்துப்பார்  

தெரிந்த இடத்திலேயே
 தொலைந்து போகலாமே 
தோற்கின்ற போதும் 
வெல்லும் சுகம் கிடைக்குமே 
இதயத்தை கொடுத்தபின்
 உயிர்வாழலாமே 
இதற்காகவேனும் காதலித்துப்பார் 

தியானம் தவம் இன்றி
 ஞானம் கிடைக்குமே 
பிரிவும் தனிமையும் துயரும்
 இனிக்குமே 
சாவே உன்னிடம் 
சரணடைந்து போகுமே  
இதற்காகவேனும் 
காதலித்துப்பார்   

புகையும், மதுவும் உனக்கு
 போதை தரவில்லையா  
சேர்த்துவைத்த செல்வம்
 சுகம் தரவில்லையா 
நீ கற்றறிந்த நூல்கள் 
உன் கண் திறக்கவில்லையா
யாதும் கிடைக்கும் 
காதலித்துப்பார்.....
Author: கிரிஷன்
•3:09 PM
நான் முகம் பார்க்கையில்;
உன் விம்பத்தைக் காட்டும்
என் குறும்புக்கார
கண்ணாடி ,,
என்னைக் கேட்காமலேயே
உன்னைப் பின்தொடரும்
குளப்படிக்கார
கால்கள் .

என்னை வெறுப்பேற்றுவதாய் எண்ணி
நீ உதிர்க்கும்
ஏளனச்சிரிப்பில்
சிதறும் சில்லறைகள் ,
அருந்துவதற்கு அல்ல- உன்
அருகே அமர்வதற்கு
ஒரு சாட்டாய்
உன் ஆகாரப்பொதி.

இவை போதும் எனக்கு
என் காதல் சொல்லத்தேவயில்லை ......

நீ சிலிர்த்து சோம்பல் முறிக்கையில்,
உனக்கே தெரியாமல்
நீ எழுப்பும்
செல்ல முனகல்
என் பக்கக் குறிப்பாய்
அப்போது
உன் கூந்தல் உதிர்க்கும்
சில முடிக் கீற்றுகள் ...

வலி என்று சொன்னாலே
உன் விழி வழிந்தோடி
தோள் நனைக்கும்
உன் இரக்கத்துளி,,
என் காதலே நீ என்று அறியாமல்
என் கவிதைகளில் மட்டும்  தோழி
நீ காட்டும்
தீராத காதல் ....

இது போதும் எனக்கு ,,
சொல்ல சொல்லே தேவையில்லை,
என் காதல் சொல்லவும் தேவையில்லை ,
நிலவுப் பாட்டு
என்றுமதன்
செவிகளை சேர்வதில்லை .......
Author: கிரிஷன்
•3:07 PM
கடந்துபோகும் மேகத்துக்கும்
கையசைத்து போகிறாய் ,,
உதிர்ந்து போகும் மலர்களுக்காய்
கண்ணீரும் சிந்துகிறாய்
விழி இழந்த குருடனுக்கு
வீதித்துணை ஆகிறாய்
எனை இழந்த எனையோ
வீசி எறிகிறாய்...


என் வானத்து சூரியன் நீ
என்னையே எரித்தாலும்
இரவெல்லாம் தூங்காது
உன் விடியலுக்காய் காத்திருப்பேன்
 என் விரல்கள் கொண்டு
என்விழிகளை நீ குத்தினாலும்
உன் விழிப்ப் பார்வையில்
என் உலகம் கண்டிருப்பேன்

என் காதலை ஏரித்து
உன் குளிர் காய்கிறாய்
என் கண்ணீரில்
காகிதக் கப்பல் விடுகிறாய்
 என்   ஆறறிவை  பறித்த ஆழிப் பேரலையே
எப்போதும் கசக்கின்ற துன்பத் தேனமுதே
நீ மறுத்தாலும் வெறுத்தாலும்
மறக்காது தொடர்வேன் .....
வெட்டிப் போட்டாலும்
 உன் இடம் தேடிப் படர்வேன்